Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 25, 2019

ஏப்ரல், 27ல் ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு தேர்வு


ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு தேர்வு, ஏப்ரல், 27ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பி.எஸ்சி., கேட்டரிங் படிப்பில் சேர்வதற்கு, தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.


இந்த தேர்வு, ஓட்டல் மேலாண்மைக்கான தேசிய கவுன்சிலிங் சார்பில், ஏப்., 27ல் நடத்தப்பட உள்ளது.இந்த ஆண்டு, ஓட்டல் மேலாண்மை நுழைவுத் தேர்வை, கணினி முறையில், தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், மார்ச், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, ஓட்டல் மேலாண்மை கவுன்சில் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை ,www.nta.ac.inமற்றும்,www.ntanchm.nic.inஎன்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.