Breaking

Tuesday, February 12, 2019

ஈ.வெ.ரா. பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீடு


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 11.02.2019 அன்று முனைவர் ஹெப்ஸி ரோஸ்மேரி, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவர், கேரளப் பல்கலைக்கழகம், அவர்கள் ஈ.வெ.ரா. அறக்கட்டளைச் சொற்வினை ’சொல்லிணக்க மரபு’ எனும் பொருண்மையில் நிகழ்த்தினார்.இந்நிகழ்விற்கு நிறுவன இயக்குநர் பேரா. முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமை தாங்கினார்.

அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலினை நிறுவன பேரா. முனைவர் சதிஷ் அவர்கள் வெளியிட அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் பெற்றுக்கொண்டார். பேரா. முனைவர் பெ.செல்வகுமார் அவர்கள் கருத்துரை வழங்கினார். பேரா. முனைவர் வி.இரா.பவித்ரா அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்புச் செய்தார்.