
குடிமைப் பணி தேர்வெழுதி நேர்முகத் தேர்வு வரை சென்றும் பணி வாய்ப்பு கிடைக்காதவர்களை வேறு பணிகளுக்கு மத்திய அரசு தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) யோசனை தெரிவித்துள்ளது.
குடிமைப் பணிக்காக தேர்வெழுதி நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வி அடைபவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு மற்ற அமைச்சகங்களும், அமைப்புகளும் பணிவாய்ப்பு வழங்கலாம்.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 11 லட்சம் பேர் குடிமைப் பணி தேர்வெழுதுகின்றனர். ஆனால், இறுதியில் 600 பேர் மட்டுமே பணிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சில நிலைகளில் தேர்வு நடத்தி அதில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள்.
மேலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்றார் அரவிந்த் சக்úஸனா.


