Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 27, 2019

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஒப்போ நிறுவனம்





ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது. ஒப்போ நிறுவன துணை தலைவர் ப்ரியான் ஷென் அந்நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை பார்க்க ஹூவாய் மேட் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன,
ஸ்மார்ட்போனின் மத்தியில் சாதனத்தை மடிக்கக்கூடிய வகையில் கீல் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஒப்போவின் காப்புரிமையில் பாப்-அப் ரக கேமரா அமைப்பு வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. மடிக்கக்கூடிய வடிவமைப்பில் பெரிய டிஸ்ப்ளே கொண்ட போனினை பயன்படுத்த முடியும்.



இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை சுற்றி பெரிய பெசல் காணப்படுகிறது.ஸ்மார்ட்போனின் பின்புறம் சற்றே சிறிய ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமராக்கள், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படுகிறது.ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலின் கீழ் 'Designed by OPPO' எனும் வாக்கியம் காணப்படுகிறது.



மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த அதிகளவு மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆர்வத்திற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது பற்றிய முடிவு எட்டப்படும் என ஒப்போ நிறுவன துணை தலைவர் தெரிவித்தார்.