Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 27, 2019

விரதம் ஏன் உடலுக்கு நல்லது? இந்த தொன்மையான அறிவியல் அதற்கான மிகச்சரியான விடையை கொண்டிருக்கிறது


அதிகமாக சாப்பிடுவதுடன், கூடுதல் கலோரிகளை எரிக்கும் உணவுக்கட்டுப்பாட்டு முறையை (Diet) அவ்வப்போது நிறுத்திவிடும் தொடர்ந்ததொரு சுழலில் அவ்வபோது சிக்கிக்கொள்வதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதீத உடற்பயிற்சி அல்லது நாள்பட்ட நோய்கள் உங்களை ஒவ்வொரு நாளும் சோர்வடையச் செய்கிறதா? உடல் பருமனும், உடல் உபாதைகளும் எப்படி ஏற்படுகிறது என நவீன அறிவியல் சொல்வது நீங்கள் நினைப்பதற்கு மாறானதாகவும் இருக்கலாம்.



நம் முன்னோர்கள் வேத அறிவியலை வளர்த்தெடுத்து அதன்வழி, இயற்கையான பொருட்களைக் கொண்டு உடலின் பிரச்னைகளுக்கான தீர்வுகளை உருவாக்கினர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேதத்தை உருவாக்கிய முனிவர்கள், நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் செரிமான மண்டலத்தில் தங்கிவிடுவதாலேயே நோய்கள் உருவாவதாக கண்டறிந்தனர். ஆயுர்வேதம் போதிப்பது போல், அவ்வபோது இந்த நச்சுக்களை நீக்கிவிடுவதன் மூலம் உடலை நோயில் இருந்து காக்கவும், மனதை விழிப்புடனும் வைத்துக் கொள்ள முடியும்.



விரதம் என்பது என்ன?

பல்வேறு நாடுகளின் தொன்மையான கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்பட்டுவரும், விரதம் என்பது குறிப்பிட்ட காலத்திற்கு குறைந்த அளவில் உணவை உட்கொள்வது. சமஸ்கிருதத்தில் பிரத்யாகாரா (பிரத்தி+ஆகாரா - உணவை தவிர்த்தல்) மற்றும் உபவாஸா (அருகே + இருத்தல் - கடவுளுக்கு நெருக்கமாக இருத்தல் )ஆகிய சொற்கள் விரதத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. முழுமையான விரதம் வயிற்றை சுத்தப்படுத்துகிறது எனில், பல்வேறு வகைப்பட்ட உணவுகளில் இருந்து பல நுண்ணூட்ட சத்துகளை உடல் கிரகிக்க பகுதி விரதமானது பயன்படும்.


கலோரியை பெறுவதை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் புற்றுநோய் அபாயத்தை குறைத்தல், இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைத்தல் மற்றும் வயதாகும் செயல்பாட்டை மெதுவாக்கவும் விரதம் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. செரிமான மண்டலத்திற்கு ஓய்வளித்தல் மொத்த உடலுக்கு நலம் பயப்பதுடன், சீரான உறக்கத்திற்கும் உதவும்.
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

பண்டைய இந்தியர்கள் இயற்கையுடன் ஒத்திசைவான வாழ்க்கையையே விரும்பினர். மாறும் பருவங்களுக்கு ஏற்ப நமது உணவை முறையை அமைத்துக் கொள்வதையும், உடலில் இருந்து வருடத்திற்கு ஒருமுறையேனும் நச்சுகளை நீக்குவதையும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

நாம் பருவங்கள் சார்ந்த உணவையும், உள்ளூர் உணவுகளையும் எப்போதும் உண்பதால் உடலின் ஏற்படும் கோஷங்களை (உடலின் வகைகளை வரையறுப்பவை) இந்த பண்டைய அறிவியலானது தகர்க்கிறது. ஐம்பூதங்களுடன் தொடர்புடைய வாதம், பித்தம், கபம் எனும் மூவகை தோஷங்கள் பருவகாலங்களை சார்ந்து மாறகூடியது. இந்த மாற்றங்களை உடலை தயார்படுத்தும் பணியை விரதம் செய்கிறது. உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய உடலிலுள்ள முக்கிய திரவங்களின் மீது நிலவின் ஈர்ப்புவிசை தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆயுர்வேதம் நம்புகிறது. விரதம் உடலுக்கு இயற்கையான வழியில் நல்லது செய்யக்கூடிய ஒன்றாகவும், அமிலத்தன்மையை குறைத்து மன மற்றும் உணர்வுகளில் சீரான தன்மையை ஏற்படுத்துகிறது.



ஒருவர் விரதத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்?

அதிகமாக சாப்பிடுவதும், அதிக அளவில் நொறுக்குத்தீனி உண்பதும் நமது ஜீரண மண்டலத்தை மோசமாக்குவதுடன், அதில் நச்சுக்களை தங்க செய்கிறது. சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், காப்பி மற்றும் மதுபானங்களை வாரத்தில் ஒருநாளேனும் தவிர்ப்பது நல்ல தொடக்கமாக அமையும். குறுகியநேர விரதம், தொடர் விரதம் - வாரம் ஒருமுறை விரதம், மாதம் ஒருமுறை விரதம் அல்லது பருவகாலத்திற்கு ஏற்ப விரதம் என தேவையை பொறுத்து விரதங்களை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. மிகவும் கடினமான முழுமையான விரதம் மேற்கொள்வதைக்காட்டிலும், ஒருவர் எளிமையான எளிதில் ஜீரணமாகக்கூடிய பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள் அல்லது கிச்சடி போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலை பெறுவதுடன், ஜீரண மண்டலத்தை நச்சுநீக்கம் செய்து ஆரோக்கியம் பெறலாம்.



கவனத்தில் கொள்ள வேண்டிய டிப்ஸ் :

விரதம் என்பது உங்களை பலவீனமாக உணரச் செய்யவோ, மிகுந்த பசியுணர்வை தூண்டுவதாகவோ இருக்கக்கூடாது. திரிபலா போன்ற மூலிகைப்பொருட்கள் சிறந்த நச்சுநீக்கியாக (Detoxifier) செயல்படுவதுடன், உங்களின் ஜீரண மண்டலத்திற்கும் நலன் செய்யக்கூடியது. தியானம் போன்ற பயிற்சிகளை செய்வது நல்லமைதியான வழியில் விரதம் மேற்கொள்ள உதவும். விரதத்தை முடிக்கும்போது அதீதமாக உண்ணாமல், எளிதில் ஜீரணமாகும் உணவுகளையும், பழச்சாற்றையும் பருகுவது அவசியம்.



விரதம் உண்மையிலேயே எப்படி உதவுகிறது?

ஆய்வுகளின்படி, விரதத்தின்போது ஜீரணக்குழாய்க்கு ஓய்வளிப்பதால் அந்த ஆற்றலானது ஆற்றுப்படுத்தக்கூடியதாகிறது. இது, உடலில் தேங்கிக்கிடக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றும்வேளையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், உடலை நாம் லேசாக உணர்வதுடன், உடல் ஒளிபெறுகிறது. தூய்மையடைந்த, தெளிந்த உடலானது மனதின் செயல்பாட்டை தூண்டி தெளிவான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

நமது முன்னோர்கள் மதத்தை ஒரு கருவியாக உபயோகித்து விரதத்தின் மூலம் நல்ல உடல் ஆரோக்கியம் பெறுதல் எனும் செய்தியை காலந்தோறும் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இத்தகைய பாரம்பரியமானது நிரூபிக்கப்பட்ட அறிவியல் அடிப்படையை கொண்டிருப்பதை நாம் இப்போது அறிகிறோம். நமது பாரம்பரிய வேர்களை பற்றிக் கொள்ளும் நேரமில்லையா இது?!