Breaking

Friday, February 15, 2019

தமிழ் வளர்ச்சிப் பணிகளில் இலண்டன் பல்கலைக்கழகம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் - பேராசிரியர் எட்வர்ட் சிம்சன் பேச்சு


சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு இலண்டன் பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசியவியல் நிறுவனத்தின் (SOAS South Asia Institute) இயக்குநர் பேரா. முனைவர் எட்வர்ட் சிம்சன் அவர்கள் 14.02.2019 அன்று வருகை புரிந்தார்!

நிறுவன இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி அயல்நாட்டுத் தமிழர் புலம் - உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தின் சார்பில் பேரா. முனைவர் கு. சிதம்பரம் அவர்களும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சார்பில் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் பேரா. முனைவர் ஆ. மணவழகன் அவர்களும் வரவேற்று ‘வளர்ச்சிப் பாதையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’ எனும் நூலினை வழங்கி சிறப்பித்தனர். பிறகு. பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தையும் பழந்தமிழர் வாழ்வியல் குறித்தான ஆவணப் படத்தையும் கண்டு மகிழ்ந்தார்!! பிறகு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிந்து வியந்து பாராட்டினார்...! தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும். மேலும் தமிழின் தொன்மையினை ஐரோப்பிய நாடுகளில் பரப்பும் முயற்சியில் இலண்டன் பல்கலைக்கழகம் ஈடுபடும் என்று கூறினார். முன்னதாக நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..!