Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

பேராவூரணி அரசுத்தொடக்கப்பள்ளியில் மேளதாளத்துடன் கல்விச்சீர் திருவிழா



தமிழகத்தை சமீபத்தில் புரட்டிப்போட்ட கஜாப்புயலால் அதிகம் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் தஞ்சாவூருக்கு முதலிடம் எனச் சொன்னால் அது மிகையல்ல.

தென்னை மரங்களை வாழ்வாதாரமாக கொண்டு விளங்கும் பேராவூரணி பகுதியில் மொத்தமாக மரங்களோடு சேர்ந்து விழ்ந்துபோனது மக்களின் பொருளாதாரம். ஆனால் நம்பிக்கை மட்டும் வீழவில்லை. ஆம் விவசாயக் குடும்பங்கள் செறிந்து இருந்தாலும், பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள பேராவூரணி கிழக்கு அரசுத் தொடக்கப்பள்ளிக்கு மேளதாளத்துடன் கல்விசீர் கொண்டு வந்து அசத்தினர் பெற்றோர்கள். அதுவும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் வந்தவர்கள் அத்துனைபேரும் பெண் பெற்றோர்கள் என்பது சிறப்புக்குரியது.



25 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்குள்ளான பொருட்கள்தான் என்றாலும் கூட, அதனைக் கொண்டுவந்த பெற்றோர்களின் பொருளாதாரப் பிண்ணனியைப் பார்க்கும்பொழுது, அது மிகவும் போற்றுதலுக்குரியதாக இருக்கின்றது. நிகழ்விற்கு வருகை தந்தவர்களை தலைமை ஆசிரியர் மாலதி வரவேற்றுப்பேசினார்.

ஆசிரியர் பயிற்றுநர் சித்ரா கலந்துகொண்டு பெற்றோர்களை வாழ்த்திப்பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுபா,பாலசுந்தரி,சுமதி ஆகியோர் செய்திருந்தனர். விழாவின் முடிவில் ஆசிரியர் சுபாஷ் நன்றி கூறினார்.