Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 16, 2019

ஏப்.,1-ல் SSLC விடை திருத்தம் துவக்கம்


பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல், துவங்க உள்ளது.


மொழி பாடங்களுக்கு, ஏப்., 6ம் தேதிக்குள்ளும், மற்ற பாடங்களுக்கு, ஏப்., 11ம் தேதிக்குள்ளும் திருத்த பணிகளை முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தர விட்டு உள்ளது.


'மொழி பாடங்கள் மற்றும் முக்கிய பாடங்கள் அனைத்துக்கும் ஒரே நாளில், விடைத்தாள் திருத்தத்தை துவக்கி, ஏப்., 14க்குள் முடிக்க வேண்டும்' என, தேர்வுத்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.