Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 2, 2019

ரயில்வேயில் 1.3 லட்சம் காலி பணியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!


ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாது மற்றப்பணிகளில் காலியாக உள்ள 1.30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் துவங்கியுள்ளது. ரயில்வே துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் 1.30 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தொழில்நுட்பம் இல்லாத மற்ற பிரிவுகள் எனும் போது பாரா மெடிக்கல் ஊழியர், இளநிலை உதவியாளர், தட்டச்சு, கணக்கர், ரயில் பணியாளர், பயணச்சீட்டு பரிசோதகர், உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளது. அரசுப் பணிக்கு தயாராகுபவர்களுக்கு இம்முறை மிகமிக அதிர்ஷ்டகரமான வாய்ப்பாக ரயில்வே அறிவிப்பு இருக்கும். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆர்ஆர்பி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, கல்வி தகுதி ஆகியவை துறைசார்ந்து பணியிடத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது.



இதற்கான விவரங்கள் வருமாறு:

பணியிடம்: இந்திய ரயில்வே
பணி: தொழில்நுட்பம் இல்லாத மற்ற பிரிவுகள்
காலிபணியிடங்கள்:
லெவல் 1 பணிக்கு - 1,00,000
தொழில்நுட்பம் அல்லாத பணிக்கு-30,000
மொத்தம்- 1,30,000


தகுதி: கல்வி தகுதி - துறை சார்ந்து பணியிடத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. .

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் விண்ணப்பம்.

தமிழகத்தில் பணிபுரிய விரும்புவோர் : www.rrbchennai.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்