
முதுகுத் தண்டுக்கு பலம் தரும் பிறையாசன ஆசனத்தின் செய்முறையைப் பார்க்கலாம்.
செய்முறை :
இவ்வாசனத்தை அர்த்த (பாதி) சக்கராசனம் எனக் கூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளைய வேண்டும்.
கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.
பலன்கள்:
* முதுகுத் தண்டு பலம் பெறும்.
* இளமை மேலிடும்.
* உடலில் உள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்பெற்று புத்துணர்ச்சி பெறும். * சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு உண்டாகும்.
* கூன் முதுகு நிமிரும்.
* நெஞ்சுக் கூடு விரிந்து நுரையீரல், சுவாச உறுப்புகள் பலம் பெறும்.


