Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2019

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: 17-இல் வழிகாட்டி முகாம்!


காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: 17-இல் வழிகாட்டி முகாம்!! காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஃபோக்கஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வை நடத்தி வருகிறது. தற்போது 969 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான வழிகாட்டும் முகாம் ஃபோக்கஸ் அகாதெமியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்17) நடைபெறவுள்ளது.

தகுதியுள்ள தேர்வர்கள் தங்களது சுய விவரங்களுடன் ஃபோக்கஸ் அகாதெமிக்கு நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7010136605, 28489 51454 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்த அகாதெமி தெரிவித்துள்ளது.