Thamizhkadal WhatsApp Channel

ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை..!




சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 68 சட்ட எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி : சட்ட எழுத்தர் (Law Clerks)

காலியிடங்கள்: 68

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். சம்பளம்: மாதம் ரூ. 30,000 வரையில் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar General, High Court, Madras-600 104 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது estt.madrashiahcourt@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.



மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Guidelines_2019.pdf அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.04.2019
Share:

Total Pageviews

Categories