Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2019

3D டெப்த் சென்சார்களுடன் உருவாகும் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்



சாம்சங் நிறுவனத்தின் 2019 நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி நோட் 10 உருவாகி வருகிறது. புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் சாம்சங் பல்வேறு மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் 12 எம்.பி. f/2.4 டெலிபோட்டோ லென்ஸ், OIS, இரண்டாவதாக 12 எம்.பி. f/1.5-f/2.4 டூயல் அப்ரேச்சர், OIS வசதி, மூன்றாவது 16 எம்.பி. f/2.2 அப்ரேச்சர் அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் நான்காவதாக 3D ToF சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் SM-N975F என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்திருந்தது.


இதில் 6.4 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. மிகப்பெரிய டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கும். இதுதவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் சூப்பர் ஸ்லோ மோஷன் வீடியோ பதிவு செய்யும் வசதி, IP68 தர சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, டால்பி அட்மாஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. மென்பொருள் ரீதியாக புதிய நோட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், ஒன் யு.ஐ. கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.



கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. மெமரி என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கும்.