Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2019

தேர்தல் தள்ளிப்போகாது - தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டம்



இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அடுத்தடுத்து எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்தி வருவதால் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

அடுத்தடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியதால் இரு நாட்டிலும் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்தியாவின் எல்லையில் உள்ள 5 விமான நிலையங்களிலும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டு வருகின்றனர். அபாயமானப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இரண்டு நாடுகளும் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாடுகளிலும் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.



இதையடுத்து நாட்டின் பாதுகாப்பு குறித்தக் காரணங்களுக்காக தேர்தல் தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. கடந்த 2 நாட்களில் நடந்த சம்பவங்கள் இந்த சந்தேகத்திற்கு வலு சேர்த்தன. இதுகுறித்து பதிலளித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி இந்திய எல்லையில் பதற்றம் நிலவுவதால் தேர்தல் தள்ளிப்போகாது என்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா கூறியுள்ளார்.



இதனால் தேர்தல் குறித்த நேரத்தில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தான் கையில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்க இருப்பதும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.