Search This Blog

Monday, March 4, 2019

அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் செங்கோட்டையன்

0 comments
கோபிச்செட்டிபாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.






ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகளின் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றை ஆய்வு நடத்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். தற்போது அரசு தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி உள்ளதால் பெற்றோர்களே முன்வந்து குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள் என்றும் கூறினார்.