Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 6, 2019

பி.எட்., படிப்பு தேர்வு அட்டவணை வெளியீடு


கல்வியியல் கல்லுாரிகளில், நான்காண்டு, பி.எட்., படிப்புக்கான, தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லுாரிகள், தமிழக அரசின் ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்புடன், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட படிப்பு, 2018ல் துவங்கப்பட்டது.


இதன்படி, பி.எஸ்சி., மற்றும், பி.எட்., ஒருங்கிணைந்த படிப்பில், இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுஉள்ளது. மார்ச், 13ல் தேர்வு துவங்கி, 28க்குள் முடிக்கப்படும் என, கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.