Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2019

பல நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்


உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் பெரிய கோளாறு ஏற்பட்டுள்ளது. வடமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் என பல நாடுகளில் பேஸ்புக் முடங்கியுள்ளது. புதன்கிழமை இரவு பல சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் இந்த பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். பேஸ்புக்கில் புதிய பதிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


சிலர் தங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையமுடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர் பேஸ்புக் பக்கங்கள் திறக்கப்படவில்லை என புகார் கூறியுள்ளனர். இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரச்னை குறித்து ஆய்வு செய்வதாகவும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் ஒரு தகவல் தோன்றுகிறது. பேஸ்புக் மட்டுமின்றி அந்நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெசெஞ்சர் ஆகியவையும் கோளாறில் சிக்கியுள்ளன.

உலகில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டிருப்பதால் நெட்டிசன்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் இது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இந்தப் பிரச்னை பற்றி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதை உறுதிசெய்துள்ளார்.