Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 4, 2019

வட்டார கல்வி அதிகாரி பதவிக்கு போட்டி தேர்வு


'வட்டார கல்வி அதிகாரி பதவிக்கு, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.



தமிழக பள்ளி கல்வித் துறையில் காலியாக இருக்கும், வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, பதவி உயர்வு மற்றும், நேரடி நியமனம் வழியாக, புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களில், பணி மூப்பு அடிப்படையில், 70 சதவீத வட்டார கல்வி அதிகாரி இடங்கள் நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள, 30 சதவீத இடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே நிரப்ப, அரசு முடிவு செய்துள்ளது.



இதற்கான போட்டி தேர்வு விரைவில் நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த எழுத்து தேர்வு, 110 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான பாட திட்டத்துக்கு, தமிழக பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. விரைவில் தேர்வு அறிவிக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்