Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 4, 2019

பொருளியல் முதுநிலை படிப்பு நுழைவு தேர்வு


இந்திரா காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு பல்கலையில், முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின், நேரடி கட்டுப்பாட்டில், இந்திரா காந்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பல்கலை செயல்படுகிறது.



இங்கு, எம்.எஸ்சி., பொருளியல், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆகியவற்றில், மேம்பாட்டு படிப்புகள் நடத்தப்படுகின்றன. பட்டப்படிப்பு முடித்தவர்கள், இவற்றில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.



இதன்படி, வரும் கல்வியாண்டில், இந்த படிப்புகளில் சேர விரும்புவோருக்கு, 'ஆன்லைன்' வழி நுழைவு தேர்வு, ஏப்., 21ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, www.igidr.ac.in என்ற, இணையதளத்தில் துவங்கியுள்ளது. ஏப்., 5 வரை, விண்ணப்பிக்கலாம்.