Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2019

தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், கணக்கு தணிக்கை அதிகாரிகள், கருவூலம், கணக்குத் துறை அதிகாரிகளுக்கு அண்மையில் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். மத்திய அரசின் அறிவிப்புப்படி அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.