Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 3, 2019

உதவி பேராசிரியர் பணிக்கான ’’நெட்” தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வுகள் முகமை


உதவி பேராசிரியர் பணிக்கான ’’நெட்” தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் நெட் எனப்படும் தேசிய அளவிலான தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.



இந்நிலையில், நெட் தேர்வுகள் ஜூன் மாதம் 20 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக இம்மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ள தேசிய தேர்வுகள் முகமை, நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும் என கூறியுள்ளது.