Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 1, 2019

சர்க்கரை நோயாளிகளுக்கு இனி இன்சுலின் தேவையில்லை!



சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து எளிதில் குணமடைய மாத்திரை ஒன்றை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.



நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே, உடல் சீராக இயங்குவதற்குத் தேவையான சர்க்கரை சத்து நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது.
அந்த சர்க்கரையை ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன.
இதனால் உடலுக்கு எந்த பிரச்னையும் வராது. இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.




இந்தப் பிரச்னை உள்ள டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் அவர்கள் தினமும் ஊசி செலுத்த வேண்டும். ஆனால், இப்படி ஊசி செலுத்துவதை பெரும்பாலோனோர் தவிர்க்கின்றனர்.



இந்த இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில் புதிய மாத்திரை ஒன்றை அமெரிக்காவில் உள்ள காம்பிரிட்ஜ் மாசாசூஸ்ட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்கள் ஊசியைப் பயன்படுத்த வேண்டாம்.



மாத்திரை நேராக வயிற்றின் உட்புற சுவரைச் சென்றடையும். எனவே, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகுந்த பலனளிக்கும் என்று புதிய மாத்திரையை உருவாக்கிய குழுவின் தலைவரான பேராசிரியர் ராஃபர்ட் லாங்கார் தெரிவித்துள்ளார்.