Thamizhkadal WhatsApp Channel

ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி தேதி அறிவிப்பு.

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அது குறித்தான பயிற்சி வரும் மார்ச் 24ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகள் பல்வேறு கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு வரும் மார்ச் 24-ஆம் தேதி முதல், இரண்டு கட்ட பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories