Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2019

மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட மிஸ்டு கால் கொடுக்கலாம்


மாற்றுத்திறனாளிகள் 94454 77699 என்ற எண்ணிற்கு மில்டு கால் கொடுத்தால் வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று சிரமமின்றி எளிதில் வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்தள வசதி, பிரெய்லி முறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


இதைத் தவிர்த்து மாற்றுத்திறனாளிகளுக்காக 24 மணிநேரமும் இயங்கும் “94454 77699” என்ற கைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி எண்ணிற்கு மாற்றுத்திறனாளிகள், தொடர்பு கொண்டு வாக்களிக்க தேவையான தகவல்களை பெறலாம்,