Search This Blog

Sunday, March 24, 2019

வீட்டிலோ , பணி செய்யும் இடத்திலோ உட்காரும்போது கடைபிடிக்க வேண்டிய விஷயம்

0 comments

சாதாரணமாக நாற்காலியில் உட்காரும்பொழுது முன்புறமாகக் குனிந்து உட்காருவது, வலதுபுறமாகவோ அல்லது இடது புறத்திலோ சாய்ந்து உட்காருவது, நடக்கின்ற பொழுது குனிந்தபடியே நடப்பது போன்ற செயல்பாடுகளால் நம்முடைய முதுகின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். அதனால் நேராகவோ அல்லது ஒரு பக்கம் சாய்ந்தபடியோ தூங்கப் பழகிக் கொண்டால் இந்த பிரச்சினையை நம்மால் தவிர்க்க முடியும்.


நாம் உட்காருகின்ற நிலையை மாற்றினால் மட்டும் தான் இதுபோன்ற வலிகளைக் கட்டுப்படுத்த முடியும். நாம் உட்காரும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தால் இந்த பாதிப்பைத் தவிர்க்க முடியும். இதுவே மருத்துவ குறிப்புகளும் சொல்கின்றன.