Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 12, 2019

வாட்ஸ்அப்- செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து மட்டுமே பெற்று பயன்படுத்த வேண்டுமாம்! WhatsApp Application


அதிகாரபூர்வமற்ற வகையில் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தோரின் கணக்கு உள்பட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் முடக்கப் பட்டு வருவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.



வாட்ஸ்அப் ஆப்பினை ஃபேஸ்புக் நிறுவனம் கையகப் படுத்திய பிறகு, வாட்ஸ்அப் பல அதிரடி நடவடிக்கைகளை தொழில்நுட்ப ரீதியாக எடுத்து வருகிறது. தற்போது தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் உலகம் முழுதும் பல பில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அதிகாரபூர்வமாக கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.
சிலர் மூன்றாம் நபர் செயலிகளை வைத்து வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர். இவ்வாறு பயன்படுத்துவது, பாதுகாப்பு அம்சத்தில் கோட்டை விடுவதாகும் என்று எச்சரிக்கிறது வாட்ஸ் அப்.

காரணம், தர்ட்பார்ட்டி ஆப் மூலம் பதிவிறக்கி பயன்படுத்தும் போது, அவற்றில் நம்மையும் அறியாமல் சில ஸ்பை கோட்கள் திணிக்கப் பட்டிருக்கும் என்றும், அவற்றின் வழியே ஒருவரது தனிப்பட்ட தகவல்கள் திருடப் பட வாய்ப்பு உண்டு என்றும் எச்சரிக்கிறது. இதனால் தனிநபர் தொடர்பான தகவல்கள் அவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பிற விவரங்களை மூன்றாம் நபர் யார் வேண்டுமானாலும் கையாளலாம் என்று எச்சரிக்கிறது வாட்ஸ்அப்! எனவே, மூன்றாம் நபர் செயலி மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்தவர்களின் கணக்கு முடக்கப்பட்டு வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.


முன்னதாக கடந்த மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியில், வாட்ஸ் அப் பயன்பாட்டில் மேலும் சில பாதுகாப்பு அம்சங்களை வாட்ஸ் அப் நடைமுறைப் படுத்தி வருவதாகவும், டார்க் மோட், கைவிரல் மூலம் வாட்ஸ் அப்பை லாக் செய்யும் வசதி லாக்கை எடுக்கும் வசதி என சிலவற்றை அறிமுகம் செய்து வருவதாகக் கூறியிருந்தது.