JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, April 20, 2019

10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!




10ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் வரும் 23, 24ஆம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் இன்றுஅறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பிற்கான சிறப்பு துணை பொதுத்தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள்,தட்கல் திட்டத்தின் கீழ், 500 ரூபாய் கூடுதல் கட்டணத்துடன், வரும் 23 மற்றும் 24ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.