Search This Blog

Saturday, April 20, 2019

தகுதி தேர்வுக்கு தயாராவதில் சிக்கல்; புத்தகங்கள் கிடைக்காமல் அவதி

0 comments
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள், தேர்வுக்குத் தயாராகும்விதமாக, பாடப் புத்தகங்களைப் படித்து வருகின்றனர். இதற்கானப் புத்தகங்கள் கிடைக்காமல், அவதிப்பட்டு வருகின்றனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த, தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில்பெற்றுள்ளது.இதுவரை, தேர்வு நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில், பட்டதாரி மற்றும் பட்டயப் பயிற்சி முடித்துள்ள ஆசிரியர்கள், தேர்வுக்காக, தயாராகி வருகின்றனர்.

பாடத் திட்டமாக, ஒன்று முதல், பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான புத்தகங்கள், கடைகளில் விற்பனை செய்யப்படாததால், மாணவர்களிடம் புத்தகங்களைக் கேட்டு, நச்சரித்து வருகின்றனர்.மூன்றாம் பருவத் தேர்வு முடிந்தவுடன், மாணவர்களிடம் இருந்து, புத்தகங்களை பள்ளிகளில் திரும்பப் பெற்றுக்கொண்டதால், அவர்களிடமும் புத்தகங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.