
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பொதுமக்கள் ஏதுவாக வாக்களிக்க தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்கவேண்டுமென, தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை தர தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.





