எஸ்.ஐ தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி

செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை யின் சிறப்பு பயிற்சி மையம் சார்பில் தமிழக காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கும், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும் சென்னையில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான அறிமுக வகுப்பு சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)

காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உடையோர் 86680-38347 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பெயரை பதிவுசெய்துகொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காலை நேரில் வந்தும் பதிவுசெய்து கலந்துகொள்ளலாம். இத்தகவலை மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார்.
Share:

Total Pageviews

Categories