தேர்தல் முடிஞ்ச பின்னாடி பள்ளிய சுத்தமா திருப்பி தரணும்: போஸ்டர்களால் பள்ளி நிர்வாகம் - தேர்தல் ஆணையம் மோதல்


குஜராத், சரஸ்பூரில் உள்ள பள்ளி கட்டிடத்தை தேர்தலுக்கு பயன்படுத்திய பின்னர், அதே நிலையில் திருப்பி வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம், மாநில தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது.

குஜராத்தில், சரஸ்வதி வித்யா மண்டல் அமைப்பு சரஸ்பூர் பகுதியில் சரஸ்வதி வித்யாலயா என்ற பள்ளியை 75 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகிறது. 2017ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது இந்த பள்ளியிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அப்போது தேர்தல் தொடர்பான போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் பள்ளியில் ஒட்டப்பட்டன. தேர்தல் முடிந்ததும், தேர்தல் ஆணையம் பள்ளியை ஒப்படைத்த போது எதையும் அகற்றாமல் அப்படியே ஒப்படைத்து விட்டனர்.இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தட்டிக் கேட்ட போது, பள்ளி நிர்வாகம் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.

இதுபற்றி பள்ளி டிரஸ்டி ஜோதிந்தரா தேவ் கூறியதாவது:2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி டிரஸ்டின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடிய போது, பள்ளி முழுவதும் பெயின்ட் அடித்தோம். சட்டப்பேரவை தேர்தலின்போது சுவர் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் சுவரொட்டிகளை ஒட்டி நாசமாக்கி விட்டனர். இதுபற்றி நாங்கள் எழுத்து பூர்வமாக புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்றும் அஸ்அன்வார, சரஸ்பூர் பகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் போஸ்டர்கள் உள்ளன என்றார்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு பள்ளி நிர்வாகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் பள்ளி நிர்வாகக்குழு அல்லது பொதுமக்களுக்கு சொந்தமான சுவர்களை நாசமாக்க தேர்தல் ஆணையத்திற்கு சட்டம் அதிகாரம் வழங்கவில்லை. எனவே தேர்தல் முடிந்ததும் பள்ளியை சுத்தம் செய்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Share:

Total Pageviews

Categories