உளவியல் ரீதியாக மாணவர்களை கையாளுதல்: ஆசிரியர்களுக்கு வழிகாட்டி புத்தகம் தர திட்டம்

புதிய கல்வியாண்டில், உளவியல் ரீதியாக மாணவர்களை கையாளுவதற்கு, ஆசிரியர்களுக்கு வழிகாட்டி புத்தகம் வழங்கப்படவுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, உளவியல் ரீதியாக பல்வேறு சூழல்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரச்னைகள் அதிகம் உள்ள பள்ளிகளை முதன்மையாக தேர்வு செய்து, அங்குள்ள வளர் இளம் பருவ மாணவர்களிடம் உளவியல் ஆலோசகர்கள் கலந்துரையாடுகின்றனர்.ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒரு உளவியல் ஆலோசகர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
இதனால், ஒரு பள்ளிக்கு தொடர்ந்து ஆலோசனை வகுப்புகள் நடத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது. உளவியல் ஆலோசனையின் மூலம், மாணவர்களிடம் நல்ல மாற்றம் ஏற்படுவதால், பள்ளிகளில் இத்திட்டத்துக்கு அதிகமான வரவேற்பு உள்ளது.

குடும்பச்சூழல், பள்ளியில் ஏற்படும் பிரச்னைகளால் மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்களிடம் தனியாக கலந்துரையாடி ஆலோசனை வழங்குகின்றனர். மாணவர்களும், இந்த செயல்பாடுகளுக்கு அதிகம் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
மாணவர்களுக்கு தொடர்ந்து உளவியல் ஆலோசனை வழங்குவதன் மூலம் மட்டுமே, திட்டத்தின் முழுமையான பயனை பெற முடியும் என, ஆலோசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாணவர்களை வழிநடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.ஆசிரியர்களும், மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், அதற்கான முறையான வழிகாட்டுதல் இல்லாததால், அத்திட்டம் செயல்படவில்லை.


வரும் கல்வியாண்டில், திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.வழிமுறை புத்தகம் தயார்உளவியல் ஆலோசகர் ஒருவர் கூறுகையில், ''மாணவர்களுக்கு நாங்கள் உளவியல் ஆலோசனை ஒருமுறை வழங்கினாலும், தொடர்ந்து, அவர்களை கண்காணித்து, மனதளவில் அவர்களை தெளிவடைய செய்வதற்கான சூழல் இருப்பதில்லை. இதற்குத்தீர்வாக, தற்போது, உளவியல் ரீதியாக மாணவர்களை கையாளுவதற்கு ஆசிரியர்களுக்கான வழிமுறைகள் குறித்து புத்தகம் அச்சிடப்பட்டு, கல்வித்துறை அலுவலகங்களில் உள்ளது. புதிய கல்வியாண்டிலிருந்து, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
Share:

Total Pageviews

Categories