உணவில் பெருங்காயம் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!!


* நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.



* பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும்.

* ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும்.

* வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.



* இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது.

* பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது.

* மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.
Share:

Total Pageviews

Categories