JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, April 17, 2019

தேர்தல் பணியின் போது இறந்த, நான்கு பேரின் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தேர்தல் பணியின் போது இறந்த, நான்கு பேரின் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.தேர்தல் பணியின் போது, சேலத்தில், ஆசிரியை நித்யா, சிறப்பு தாசில்தார், ரமேஷ்; திருப்பூரில், கிராம நிர்வாக அலுவலர், செந்தில் குமார்; விருதுநகரில், உதவியாளர், திலகமாதா ஆகிய, நான்கு பேர் இறந்தனர்.

தஞ்சாவூரில், பறக்கும் படையில் இடம் பெற்றிருந்த, 'வீடியோ'கிராபர், ராஜ்கமல் காயமடைந்தார்.அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க, தேர்தல் ஆணையம் விபரம் கேட்டுள்ளது. பொதுவாக தேர்தல் பணியின் போது, இறந்தவர்கள் குடும்பத்திற்கு, தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். பலத்த காயமாக இருந்தால், 5 லட்சம் ரூபாய்; லேசான காயத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த நிதி, விரைவில் வழங்கப்படும் என, தெரிகிறது.