Sunday, May 12, 2019

தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்கள் ! இரண்டு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.


2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதில் தேர்ச்சி பெறாத சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஏப்ரலுடன் 5 ஆண்டுகால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான ஊதியத்தை அனுப்பாமல் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைத்தது.


தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE
Back To Top