Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 18, 2019

வரலாற்றில் இன்று 18.05.2019

மே 18 கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1565 – ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.
1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.
1765 – கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
1803 – ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது.


1869 – ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.
1896 – கோடின்கா துயரம்: ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாசின் முடிசூடும் நிகழ்வுக் கொண்டாட்டத்தின் போது “கோடின்கா” என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
1897 – ஐரிய எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிராக்குலா புதினம் வெளியிடப்பட்டது.

எடிசனின் போனோகிராஃபின் காப்புரிமப் படிமம், மே 18, 1880

1900 – தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.
1910 – ஹேலியின் வால்வெள்ளியின் வாலினூடாக பூமி சென்றது.
1927 – மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – கிரிமிய தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.
1956 – உலகின் 4வது பெரிய மலையான லகோத்ஸே மலையின் உச்சியை முதன் முதலில் சுவிட்சர்லாந்து மலையேறிகள் எட்டினர்.
1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1974 – சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
1980 – வாஷிங்டனில் சென் ஹெலன்ஸ் மலை தீக்கக்கியதில் 57 பேர் கொல்லப்பட்டனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
1984 – அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.
1990 – பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் (515.3கிமீ/மணி) சென்றது.


1991 – ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1991 – வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும் அனைத்துலகம் இதனை அங்கீகரிக்கவில்லை.
2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2009 – ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.
2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.

பிறப்புக்கள்

1048 – ஓமர் கய்யாம், பார்சியக் கவிஞர், கணிதவியலாளர் (இ. 1131)
1868 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் (இ. 1918)


1872 – பெர்ட்ரண்டு ரசல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், வரலாற்றாளர், நோபல் அரிசு பெற்றவர் (இ. 1970)
1897 – பிராங்க் காப்ரா, இத்தாலிய-அமெரிக்க இயக்குனர் (இ. 1991)
1905 – ஹெட்லி வெரிட்டி, ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1943)
1908 – இயான் பிளெமிங், ஆங்கில எழுத்தாளர் (இ. 1964)
1920 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (இ. 2005)
1913 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1996)
1929 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (இ. 2011)
1933 – தேவ கௌடா, இந்தியாவின் 11வது பிரதமர்
1939 – பீட்டர் குருன்பெர்க், ஜெர்மனிய இயற்பியலாளர்
1944 – ஏ. பி. மருதழகன், மலேசிய எழுத்தாளர்


1955 – சொவ் யுன் ஃபட், ஹொங்கொங் நடிகர்
1959 – கிரகாம் டில்லி, ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 2011)

இறப்புகள்

526 – முதலாம் யோவான் (திருத்தந்தை) (பி. 470)
1911 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1860)
1956 – மாரீசு டேட், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1895)
1979 – வீ. தி. சம்பந்தன், மலேசிய அரசியல்வாதி (பி. 1919)
2009 – பாலசிங்கம் நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
2010 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1932)



சிறப்பு நாள்

அனைத்துலக அருங்காட்சியக நாள்
போர்க்குற்ற நாள் (இலங்கை)
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் (இலங்கைத் தமிழர்)