47 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்: பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர்

சேலம்: கோகுலநாத இந்து மகாஜன பள்ளியில் படித்த மாணவர்கள், 47 ஆண்டுக்கு பின் சந்தித்துக்கொண்டனர். அவர்களுக்கு, தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தினார். சேலம், கோகுலநாத இந்து மகாஜன உயர்நிலைப்பள்ளியில், 1972ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு விழா, கடந்த, 26ல் நடந்தது. முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற, மாவட்ட கல்வி அதிகாரியுமான பிரபு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இதில், 47 ஆண்டுக்கு பின், சந்தித்த மாணவர்கள், தங்களின் நண்பர்களை, அடையாளம் கண்டு பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து, தங்கள் முன்னாள் ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். முன்னதாக, முன்னாள் ஆசிரியர்களான, வேம்பன், காளியப்பன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.தமிழாசிரியர் காளியப்பன், முன்னாள் மாணவர்களுக்கு, சிலப்பதிகாரத்தை பாடமாக நடத்தினார்.
Share:

Total Pageviews

Categories