Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 22, 2019

தமிழகத்தில் உள்ள 9 கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள 9 கல்லூரிகளில் பகுதி நேரபி.இ., பிடெக். படிப்புகளில் சேர ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை செயலர் வி.செல்லதுரை, கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, சிஐடி கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த படிப்புகளில் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.ptbe-tnea.com என்ற ஆன்லைன் மூலமாகதற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் ஜூன் 4-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். இதை 'செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக் படிப்பு சேர்க்கை,கோயமுத்தூர்'என்ற பெயருக்குவரைவோலையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜூன் 7-ம் தேதி கடைசி

ஆன்லைனில் பூர்த்திசெய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.அத்துடன் வரைவோலையை இணைத்து 'செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு மாணவர் சேர்க்கை, கோயமுத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி), அவிநாசி ரோடு, கோவை- 641014' என்ற முகவரிக்கு வரும்ஜூன் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களாக இருக்க வேண்டும். சேர விரும்பும் கல்லூரியில் இருந்து 120 கி.மீ. சுற்றளவில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். ஜூன் 22 மற்றும் 23-ம்தேதிகளில் விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெறும்.27-ம்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

30-ம் தேதி சிவில் இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், கணினி அறிவியல் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறுஅவர் தெரிவித்தார். பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ அப்போது உடனிருந்தார்.