Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 18, 2019

குற்றியலுகரப் புணர்ச்சி TNPSC TET TRB STUDY MATERIALS





WATCH VIDEO AND CLICK DOWNLOAD

குற்றியலுகரப் புணர்ச்சி 

புணர்ச்சி வகையுள் குற்றியலுகரப் புணர்ச்சியும் ஒன்றாகும்.

இக்குற்றியலுகரப் புணர்ச்சியும் உடம்படுமெய்ப் புணர்ச்சி போல, உயிரீற்றுப் புணர்ச்சியின் வகைப்படும்.

குற்றியலுகரப்புணர்ச்சி விளக்கம்

இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் நிற்க, வருமொழி முதலில் உயிர் வந்து புணர்வது குற்றியலுகரப் புணர்ச்சி எனப்படும்.

எ.கா நாடு+இல்லை

இச்சொற்களின் நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரமும் வருமொழி முதலில் உயிரும் வந்துள்ளதைக் காணலாம்.

இவ்வாறு நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரமும் வருமொழி முதலில் உயிரும் வருமேயானால், நிலைமொழி ஈற்று உகரம் தாம் ஏறிய மெய்யை விட்டு ஓடிவிடும்.

நாடு+இல்லை

நாட்(உ)+இல்லை

நாட்+இல்லை

குற்றியலுகரம் மெய்விட்டு ஓட, நின்ற மெய் மேல் வருமொழி முதல் வந்த உயிர் எழுத்து ஏறி முடியும்.

எ.கா.

நாடு+இல்லை

கழுத்து+அறுப்பு

பங்கு+இல்லை

இயல்பு+இல்லை

கயிறு+அறுந்தது

எஃகு+உடைந்தது



வேற்றுமைப் புணர்ச்சியின்போது அறுவகைக் குற்றியலுகரங்களுள் நெடில்தொடர் குற்றியலுகரம், உயிர்த்தொடர் குற்றியலுகரங்களில் இடையில் உள்ள ட, ற ஒற்று இரட்டித்துப் புணரும்.

நாடு+பற்று நாட்+ட்+உ+பற்று

மாடு+கொம்பு

வயிறு+பசி

கயிறு+கட்டில்