Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 18, 2019

குறுந்தொகை (KURUNTHOGAI) SANGA ILAKKIYAM TNPSC TET TRB STUDY MATERIALS





WATCH VIDEO AND CLICK DOWNLOAD


குறுந்தொகை

இது எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகக் குறிப்பிடும் நூல்.

குறுமை+தொகை = குறுந்தொகை

இது அகப்பொருள் பற்றிய நூலாகும்.

‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்டநூல்

குறைந்த அடிகளை உடைய பாக்களால் ஆனது என்பதால் இதனைக் குறுந்தொகை என்று கூறப்படுகிறது.

இதன் அடிளயவு நான்கடி முதல் எட்டடிவரை ஆகும்.

எனினும் 307, 391 ஆகிய இரண்டு பாடல்கள் ஒன்பது அடிகளால் பாடப்பட்டுள்ளன.

இருநூற்று ஐவர் (205) பாடியுள்ளனர்.

இந்நூலைத் தொகுத்தவர் ‘பூரிக்கோ’.

தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை.

யார் பாடியது என அறிய முடியாத வகையில் 10 பாக்கள் உள்ளன.

ஆயினும் அப்பாடல்களில் அவ்வாசிரியர்கள் கையாண்ட சிறப்பு உவமை தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில், அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', ' காக்கைப்பாடினியார்' என்பன உவமையால் பெற்ற பெயர்களாகும்

இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் ‘பாதரம் பாடிய பெருந்தேவனார்’ ஆவர்.

இக்கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது.

கடவுள் வாழ்த்து உட்பட இதில் 402 (401+1) பாடல்கள் உள்ளன.

முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியரும், இறுதி 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை எழுதியுள்ளனர். இவ்வுரை இன்றும் கிடைக்கவில்லை.

இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.

ஆராய்ச்சிப் பதிப்பு உ.வே. சாமிநாதையர்.

உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டி எடுத்தாளப்பெற்ற சங்க இலக்கியநூல் இதுவேயாகும்.

சங்க நூல்களுள் குறுந்தொகையே முதன் முதலில் தொகுக்கப்பெற்ற நூலாகும்.

குறுந்தொகைப் பாடல்களின் வாயிலாகப் பண்டைத் தமிழ் மக்களின் ஒழுக்கம், காதல் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், நாகரிகம், மகளிர் மாண்புகள், அற உணர்வுகள் முதலியனவற்றை அறியலாம்.

இந்நூலில் முதல், கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.

வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன.

பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.

குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.

'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்கு "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலற்றுச் சான்றாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே


என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது.

"வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது.