Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 8, 2019

அதிக அளவு டீ குடிப்பதே மூட்டு வலிக்கு பெரும் காரணம்!மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்!

டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.



புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

டீயில் டோனிக் அமிலம் உள்ளது. இது உடலில் இரும்புசத்து கிரகித்துக்கொள்வதை தடுத்து அனீமியாவை உண்டாக்க காரணமாகிறது. எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.