Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 19, 2019

அசைவ உணவுகளை விட காய்கறிகளில் இருக்கும் அளப்பரிய நன்மைகள்.!!



இன்றுள்ள காலகட்ட நிலையில் அசைவ உணவு என்பது பெரும்பாலோரால் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது., இந்த அசைவ உணவினை அதிகளவு கொண்டு வரும் நிலையில்., காய்கறி மற்றும் பழவகை உணவுகளை சாப்பிடுவதற்கு பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.


காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து காண்போம்., தினமும் நாம் சாப்பிடும் தாவர வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.
நீர் சத்து நமது உடலில் குறைந்தால் தலை வலியானது ஏற்படும். இதன் காரணமாக தாவர வகை உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொண்டு தலைவலி பிரச்சனையும் நீங்கும்.


ஒற்றைதலைவலி பாதிப்பானது வெகுவாக குறையும்., நமது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும்., சர்க்கரை நோயின் அபாயமும் 18 விழுக்காடு அளவிற்கு குறையும். தாவர வகை உணவுகளை உட்கொள்வதன் மூலமாக புற்றுநோயானது தவிர்க்கப்படுகிறது., கல்லீரல் பிரச்சனைக்கு தாவர வகை உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
தாவர வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக., நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகள்., தாது உப்புகள் போன்றவை அதிகமாக கிடைக்கிறது. ஆஸ்துமா பிரச்சனை உள்ள நபர்கள் தாவர வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபடலாம். இன்றுள்ள பெரும்பாலானோருக்கு இருக்கும் வயிற்றுப் புண்., நெஞ்சு எரிச்சல்., வயிறு புரட்டல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தாவர வகை உணவுகளை உட்கொள்ளலாம்.


தாவர வகை உணவுகளை உட்கொள்வதன் மூலமாக மனச்சோர்வு மற்றும் மன அழுத்தமானது குறைகிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தாவர வகை உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும். நாம் தினமும் சாப்பிடும் தாவர வகை உணவுகளில் உப்பானது குறைந்தளவு உபயோகம் செய்யப்படுவதால்., உடலில் அதிகளவு உப்பு சேரும் பிரச்சனையானது தவிர்க்கப்படுகிறது.
எந்த ஒருஉணவையும் அளவோடு எடுத்துக்கொள்வது பிரச்சனை அல்ல., அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை மனதில் வைத்து., அசைவ உணவாக இருந்தாலும் சைவ உணவாக இருந்தாலும் சாப்பிடுவது நமது உடல்நலத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமானது.