Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 19, 2019

புத்தகப் பை, லஞ்ச் பை வாங்க வற்புறுத்தக் கூடாது: பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்


புத்தகப் பை, லஞ்ச் பை போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாடப் புத்தகங்களுக்கு ரூ.5,000 மற்றும் சீருடை, லஞ்ச் பை ஆகியவற்றுக்கு ரூ.5 ஆயிரம் கேட்பதாக ஹேமலதா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணி போன்றவற்றை பள்ளி நிர்வாகங்கள் விற்பனை செய்யலாம். ஆனால், லஞ்ச் பை, ஸ்கூல் பை போன்றவற்றை வாங்க வற்புறுத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.