`பணம் எடுக்கலாம், கணக்கு தொடங்கலாம்!'- வீடு தேடிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிச் சேவை

கால்கடுக்க நின்று பெறும் வங்கிச் சேவைகள், உங்கள் வீட்டு வாசலுக்கே வந்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற சேவைகளைத் தனியார் மற்றும் வணிக வங்கிகள் ஏற்கெனவே அளித்துவந்தன. தற்போது, பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இந்த நடமாடும் வங்கிச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், மொத்தம் 14 மாவட்டங்களில் 'பேங்க் ஆன் வீல்ஸ்' என்ற பெயரில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், பெரம்பலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இந்தச் சேவையை முதியவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

'பேங்க் ஆன் வீல்ஸ்' வாகனத்தில், மைக்ரோ ஏடிஎம் வசதியோடு சிறப்பு அலுவலர் ஒருவரும் வங்கி சார்ந்த சேவைகளுக்கு உதவி புரிவார். பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், வங்கிக் கணக்கு தொடங்குதல், பாஸ்புக் அச்சிடுதல் போன்ற சேவைகளை இந்த 'பேங்க் ஆன் வீல்ஸ்' திட்டத்தின்மூலம் வீட்டு வாசலிலேயே பெற முடியும். 'கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு இந்தச் சேவை உதவிகரமாக இருக்கும்' என ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது.
Share:

Total Pageviews

Categories