JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, May 30, 2019

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் கூறியது கேள்விப்பட்டிருப்போம். ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், நமது உடலானது எனர்ஜியுடன் இருக்கும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடல் எடை குறைக்கிறது. பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும்போது தான் தலைவலி ஏற்படுகிறது, அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது.