
WATCH VIDEO AND CLICK DOWNLOAD
ஐங்குறுநூறு
ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு.
இந்நூல், ஐந்து திணைகளிலும் தனித்தனியே நூறு நூறு பாடல்களால் பாடப்பட்ட, ஐந்து நூறுகளின் தொகுதி என்பதால் இதற்கு ஐங்குறுநூறு எனப்பட்டது.
எட்டுத் தொகையுள் மூன்றாவதாக வைத்துக் கூறப்படும் நூல்.
இது அகத்திணை நூல்.
ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது.
மூன்றடி முதல் ஆறடிவரை பாடப்பட்ட நூல்.
இந்நூல் (500) ஐநூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
திணை பற்றிப் பாடுவதில் வல்லமை பெற்ற ஐந்து பெரும்புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளது.
மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசை முறையில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இவை முறையே ஓரம்போகி, அம்மூவன், கபிலர், ஓதலாந்தை, பேயன் ஆகிய ஐந்து ஆசிரியர்கள் பாடியுள்ளனர்.
திணை பாடலாசிரியர்
மருதம் ஓரம்போகி
நெய்தல் அம்மூவன்
குறிஞ்சி கபிலர்
பாலை ஓதலாந்தை
முல்லை பேயன்
இதனை, மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன்
கருதுஞ் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நுறு.
ஒரு தனிப்பாடல் விளக்குகிறது.
இந்நூலைத் தொகுத்தவர் ‘புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்’.
தொகுப்பித்தவர் கோச்சேரமான் ‘யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை’.
இந்நூலில் ஒவ்வொரு தினையிலும் உள்ள 100 படல்கள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனித் தலைப்புக்களின் கீழ்ப் பகுக்கப்பட்டுள்ளன.
இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
இக்கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
இந்நூல் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களால் 1903ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.
ஐங்குறுநூற்றில் உள்ள ஐநூறு பாடல்களில்129, 130 ஆகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால்498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
அவற்றுள் 416, 490 ஆம் செய்யுட்களின் இரண்டாம் அடிகளில் சீர்கள் குறைந்து காண்கின்றன.
எட்டுத்தொகை நூல்களில் தொல்காப்பியம் கூறும் வரிசைப்படி குறிஞ்சித் திணையை முதலில் வைக்காமல் மருதத் திணையை முதலில் வைத்துப் பாடிய நூல் இது ஒன்றே ஆகும்
தாய்முகம்நோக்கியேஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
அம்மூவனார்இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
சங்க இலக்கியத்தில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு ஆகும்.
இந்திர விழா குறித்து கூறும் தொகை நூலும் இதுவேயாகும்.
தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வனப்பு இந்நூலில் விரவி வந்துள்ளது.


