Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 16, 2019

நற்றிணை TET, TNPSC, TRB, SET, NET, VAO STUDY MATERIALS




WATCH VIDEO AND CLICK DOWNLOAD


நற்றிணை

நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது.

நன்மை+திணை = நற்றிணை (சிறந்த ஒழுக்கம் என்னும் பொருள் கொண்ட நூல்)

இது எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகக் குறிப்பிடும் நூல்.

இது அகப்பொருள் பற்றிய நூல்.

‘நல்’ என்னும் அடைமொழி கொண்டநூல்.

ஒன்பது அடிமுதல் பன்னிரண்டு அடிவரையில் பாடப்பட்ட நூல்.



இது 400 பாடல்களைக் கொண்டு அமைகிறது. ஆதலால் நற்றிணை நானூறு என்ற சிறப்புப் பெயரும் இதற்குண்டு.

இதனை 275 புலவர்கள் பாடியுள்ளனர்.

இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.

இந்நூலைத் தொகுத்தவர் பாண்டிய மன்னன் பன்னாடு தந்த மாறன் வழதி.

தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

இதற்குப் பழைய குறிப்புக் கொண்டு பின்னாத்தூர் நாராயணசாமி அய்யர் எழுதிய விளக்க உரையே முதல் உரையாகும்.

குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர்.

அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர்.



மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை.

இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.

நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம்.

தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவைச் சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும், காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.

மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது.

பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம்.



மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.