Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 16, 2019

செல்போன் மூலம் ஆதார் எண்ணை முடக்கும் வசதி வந்தாச்சு.!


ஒருவரின் ஆதார் எண்ணை மற்றொருவர் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க புதிய வசதியாக, செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் வாயிலாக ஆதார் எண்ணை, லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.


ஒருவரின் ஆதார் எண்ணை மற்றொருவர் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி, தனித்துவ அடையாள ஆணைய இணைய பக்கத்தின் வாயிலாகவோ, அல்லது செல்போன் குறுஞ்செய்தி மூலமாகவோ, ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை லாக் செய்யவோ, அன்லாக் செய்யவோ முடியும்.ஓடிபி கடவுச் சொல்:


குறுஞ்செய்தி மூலம் இந்த வசதியைப் பெற 1947 என்ற எண்ணுக்கு GETOTP என்று டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட வேண்டும். இதை அடுத்து ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு 6 இலக்க ஓடிபி கடவுச்சொல் வந்து சேரும். அது வந்தவுடன், LOCKUID ஸ்பேஸ், ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண் - ஸ்பேஸ் - 6 இலக்க ஓடிபி கடவுச்சொல்லை டைப் செய்து அனுப்ப வேண்டும்.


குறுஞ் செய்தி மூலம் அன்லாக்:

அவ்வாறு அனுப்பினால் ஆதார் எண் லாக் ஆகி விடும். அதற்கான தகவலும் செல்போனுக்கு வந்து சேரும். அதேவேளையில், குறுஞ்செய்தி மூலம்,. அன்லாக் செய்ய வேண்டும் என்றால், விர்ச்சுவல் நம்பர் எனப்படும் ஆதார் மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்க எண்ணை இதே போல் அனுப்ப வேண்டும்.


வலைதளத்துக் செல்ல வேண்டும்:

ஓடிபி வந்தவுடன், UNLOCKUID - ஸ்பேஸ் - மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்கம்- ஸ்பேஸ் - 6 இலக்க ஓடிபியை டைப் செய்து அனுப்பினால் அன்லாக் ஆகி விடும். www.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆதார் எண்ணை லாக் செய்யவோ அன்லாக் செய்யவோ முடியும்.அந்த தளத்திற்குள் சென்று மை ஆதாரை கிளிக் செய்தால் ஆதார் சர்வீசஸ் என்று பட்டியல் விரியும்.


ஆதார் விவரம் கிளிக்:

அதில் ஆதார் லாக் மற்றும் அன்லாக் என்பதை கிளிக் செய்ய வேண்டும். எது தேவையோ அதை கிளிக் செய்து, தேவையான விவரங்களை பதிவு செய்தாலே, ஆதார் எண்ணை லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் முடியும்.