Search This Blog

Sunday, June 9, 2019

யுபிஎஸ்சி எஞ்சினியரிங் தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு

0 comments
UPSC
எஞ்சினியரிங் சர்வீஸ் (மெயின்) தேர்வுக்கான அட்மிட் கார்டை வெளியிட்டுள்ளது.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஞ்சினியரிங் சர்வீஸ் (மெயின்) பணிக்கான ஆள் சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஜூன் 30ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.



இந்நிலையில், upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. இத்தளத்துக்குச் சென்று அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யலாம்.

மூன்று கட்டங்களாக நடக்கும் இந்த தேர்வில் 581 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படஉள்ளன. தேர்ச்சி பெற்றவர்கள் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பிரிவுகளில் பணி அமர்த்தப்படுவர்