THAMIZHKADAL TODAY NEWS

கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்


கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று, நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஸ்ருதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியானது. இதில், தமிழக அளவில் மாணவி ஸ்ருதி 685 மதிப்பெண்களுடன் முதலிடமும், தேசிய அளவில் 57-ஆவது இடமும் பிடித்துள்ளார்.


இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு ஸ்ருதி அளித்த பேட்டியில், 'கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. 2 ஆண்டுகள் எந்தவித தொந்தரவுமின்றி கடுமையாக படித்தால் நீட் தேர்வில் பெறலாம்' என்று தெரிவித்துள்ளார்.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel